
சட்டைப் புலம்பல்
தடவினார்கள்
தழுவினார்கள்
நுகர்ந்தார்கள்
கசக்கினார்கள்
இணைசேர நடந்தார்கள்
இணையாகக் கிடந்தார்கள்
மிடுக்காக மகிழ்ந்தார்கள்
இரவோடு
கழற்றிவிட்டு,
பகலில் நாடினார்கள்
இன்னொன்று...
அதற்கும் இதுதானென்று
அறிந்ததோ இல்லையோ?
சுவை
புழு அறியும்
மண்ணின் சுவை
மீன் அறியும்
புழுவின் சுவை
கொக்கறியும்
மீனின் சுவை
மனிதரறிவார்
கொக்கின் சுவை
மண்ணறியும்
மனிதச் சுவை
புழு அறியும்
மண்ணின் சுவை.
சமைத்தல்
முதலுணவைச்
செடிகள் சமைக்க,
இரண்மாமுணவை
ஆடு மாடு சமைக்க
மூன்றாமுணவை
மனிதர் சமைக்க
நான்காமுணவைச்
சமைக்கிறது மண்.
தேவை
வேரில் உறிஞ்சத்
துளிகளாய் நீரும்
சமைத்துண்ண
சற்றே சூரியச் சூடும்
பசிய உடல் வளர்த்து
சுணை சுணையாய்ப் பூப்பூத்து
காற்றிலும் கண்களிலும்
மனசுகளிலும்
குளுமை வழங்கும்
சின்னஞ் சிறு
புல்லின் தேவை.
சூடு
சூடு கண்டே
பிறக்கின்ற தெதுவும்
சூடு உண்டே
வளர்கின்ற தெதுவும்
சூடு சுட்டே
மடிகின்ற தெதுவும்.
கவித்துளிகள்
கருத்த இசைக் கருவி
வானவில் கானம்
குயில்.
மரணத்தின் யாப்புகளை
மௌனமாய் இசைக்கிறது
பழுத்த இலையொன்று...
கணங்களில் மறைந்திருக்கும்
கவிதையின்
கணம்.
3 comments:
அற்புதமான கவிதைகள்..ரசா..
யாரும் கவனிக்கவில்லையோ என வருத்தமாயிருக்கிறது.
புழு அறியும்
மண்ணின் சுவை
மீன் அறியும்
புழுவின் சுவை
கொக்கறியும்
மீனின் சுவை
மனிதரறிவார்
கொக்கின் சுவை
மண்ணறியும்
மனிதச் சுவை
புழு அறியும்
மண்ணின் சுவை
அத்தனை கவிதைகளும் அருமை தோழர்
வாழ்த்துக்கள் !!
அன்புடன் கிச்சான்
ஸ்ரீ ரச அவர்களே! "சுவை"அருமை .தர்க்கவியல் பொருள்முதல் வாதத்தின் சாரம். வாழ்த்துக்கள் ---காஸ்யபன்
Post a Comment